FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள பெருவெள்ளம்! உதவிகளை செய்ய இந்தியா தயார் - பிரதமர் மோடி பேச்சு

பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்துக்கு உதவிகளை செய்ய இந்தியா தயார் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

51 வினாடிகள் முன்பு
பிரதமர் மோடி - Center-Center-Delhi
பகிர்:

நேபாளத்தில ஏற்பட்டெ பெருவெள்ளம் காரணமாக பேரழிவு ஏற்பட்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய மக்கள், நேபாள மக்களுக்கு உறுதுணையாக நிற்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று காலை கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டின் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 36 பெண்கள் உள்பட 57 பேர் சிக்கித் தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழர்கள் உள்பட 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நேபாளத்தில் சிக்கியிருக்கக் கூடும் என்றும்,

Advertisement

Advertisement

கோஷி எனப்படும் ஆற்றில், பனிப்பாறை உடைந்து வெளியேறிய தண்ணீர், பாறைகள், மண், நீர் என அடித்துச் சென்றுகொண்டிருக்கிறது. ஆற்றின் இடையே இருந்த கட்டடங்கள், பேருந்துகளை வாரிச் சுருட்டியபடி கோஷி ஆறு பிகார் நோக்கி பாய்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 26 பேர் பலியாகியிருப்பதாகவும், 400க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 105 இந்தியர்களும் அடங்குவர் என்று கூறப்படுகிறது.

நேபாள பெரு வெள்ளம் தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது நேபாளத்துக்கு தேவையான சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தாயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி உறுதிமொழி அளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் நேரிட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments