‘பெண்களை கேலி செய்வதை நிறுத்துங்கள்’... கீர்த்தி சனோனுக்கு ராகுல் ஆதரவு!
பெண்களைக் கேலி செய்வதை நிறுத்துங்கள் என்று நடிகை கீர்த்தி சனோனுக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளதைப் பற்றி...
பெண்களைக் கேலி செய்வதை நிறுத்துங்கள் என்று நடிகை கீர்த்தி சனோனுக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் தனது சகோதருருக்கு ராக்கி கட்டுவது போல் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருந்தார்.
இந்த விளம்பரத்திற்கு நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் விமர்சித்தது இணையத்தில் பேசுபொருளானது.
Advertisement
Advertisement
நமது கலாசாரத்தைக் காக்க விதவிதமான ஆடைகள் இருந்தும் பிகினி / உள்ளாடைகள் அணிந்து சகோதரருக்கு ராக்கி கட்டுவது ஏன்? என கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டா பக்கத்தில் விமர்சித்திருந்தார்.
இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் வெடித்தது. கீர்த்தி சிலர் ஆதரவாகவும், கங்கனாவுக்கு சிலர் ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கீர்த்தி சனோன் மீதான கங்கனாவின் விமர்சனத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஒரு பெண் என்ன அணிகிறாள், என்ன செய்கிறாள், எங்க செல்கிறாள் என்பது அவளுடைய விருப்பம். சுதந்திரமாக இருக்கும் பெண்களைக் கேலி செய்வதை நிறுத்துங்கள்” என்றும், அந்தப் பதிவுக்கு கீழே, “ஆணாதிக்கத்தை உடைத்தெறியுங்கள்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
Leader of the Opposition Rahul Gandhi on Tuesday backed actor Kriti Sanon as she faced caustic comments, including a post from BJP MP and actor Kangana Ranaut, over her outfit in a Raksha Bandhan jewellery advertisement.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.