FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!

நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயமானதாக மத்திய அரசு தகவல்...

51 வினாடிகள் முன்பு
நேபாள வெள்ளம் - ANI
பகிர்:

நேபாள வெள்ளத்தில் மாயமான 320 இந்தியர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

திபெத் எல்லையையொட்டி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் அந்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுவரை 538 பேரின் சடலங்கள் நேபாள ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து கைலாஷ யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து சென்ற 103 பேரில் 21 மட்டுமே மீட்கப்பட்டு, இன்று தில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். மீதமுள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல்கூட இதுவரை தெரியவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து தில்லிக்கு அழைத்து வரப்பட்ட 21 தமிழர்களை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

”முதலில் நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். முதல்கட்டமாக காத்மாண்டுவிலிருந்து 21 இந்தியர்கள் தில்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

திரிசூலியில் நடைபெற்று வரும் 'திரிசூலி ஒன்' நீர்மின் திட்டத்தில் பணிபுரியும் 63 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.

குறித்தும் நேற்று நாங்கள் தகவல் அளித்திருந்தோம். அவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். சீனப் பகுதியில் சிக்கியிருந்த 96 இந்தியர்கள் பாதுகாப்பாக நிலம் வழியாக நேபாளத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தற்போதைய நிலவரப்படி தொடர்பு கொள்ள முடியாத அல்லது மாயமான இந்தியர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது. நேபாளத்தில் உள்ள சுமார் 100 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்கள் கைலாஷ யாத்திரைக்குச் சென்றவர்கள். வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள்.

சீனப் பகுதியில் 400 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களின் குடும்பத்தினருடனும் தூதரகத்துடனும் தொடர்பில் உள்ளனர்.

நேபாளத்துக்கு நிவாரணமாக இரண்டு ராணுவ விமானங்களில் மொத்தம் 47.5 டன் மருந்துகள், உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை அனுப்பியுள்ளோம். இன்று மாலை மூன்றாவது விமானத்தில் 13 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பவுள்ளோம்.

நேபாளத்தின் கோரிக்கையை ஏற்று, சுரங்கப்பாதை மீட்புக் குழுவை அனுப்ப தயாராகி வருகிறோம். போக்குவரத்து தொடர்பை மீட்டெடுக்க பெய்லி பாலங்களையும் அதற்கான தொழில்நுட்பக் குழுக்களை அனுப்பவும், தேசிய பேரிடர் மீட்புப் படையையும் அனுப்ப நேபாள அரசிடம் முன்மொழிந்துள்ளோம். இது தொடர்பாக நேபாள அரசாங்கத்தின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

summary

320 Indians missing in Nepal floods! Shocking information from the Ministry of External Affairs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments