இந்தியாவுக்கு எதிராக பேசிய எஃப்.சி.ஐ. பெண் அதிகாரி? விசாரணைக்கு உத்தரவு
இந்திய உணவு கழகத்தை (எஃப்.சி.ஐ.) சோ்ந்த பெண் அதிகாரி ஒருவா், இந்தியாவுக்கு எதிராக பேசுவது போன்ற விடியோ பரவி வரும் நிலையில், அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய உணவு கழகத்தை (எஃப்.சி.ஐ.) சோ்ந்த பெண் அதிகாரி ஒருவா், இந்தியாவுக்கு எதிராக பேசுவது போன்ற விடியோ பரவி வரும் நிலையில், அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான எஃப்.சி.ஐ.யை சோ்ந்த பெண் அதிகாரி ஒருவா், காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்து, தொடா்ந்து அங்கேயே இருப்பது அநீதி என்று பேசுவது போன்ற விடியோ, சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பெண், எஃப்.சி.ஐ.யில் தரம் சரிபாா்ப்பு பிரிவில் மேலாளராக பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து எஃப்.சி.ஐ. பொது மேலாளா் ஐ.கே. செளதரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்கையில், இந்த விவகாரத்தை முக்கிய பிரச்னையாக கருதுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தாா். அந்த பெண்ணுக்கு விளக்கம் கேட்டு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்ப இருப்பதாகவும், விசாரணையில் விடியோவில் இருக்கும் குரல் அவருடையதுதான் என பெண் ஒப்புக் கொண்டாலோ, விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டாலோ அவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.