ஓடும் பேருந்தில் பள்ளி மாணவியைக் கூட்டு வல்லுறவு செய்த ஓட்டுநர், நடத்துநர்!
ஓடும் பேருந்தில் பள்ளி மாணவியை ஓட்டுநர், நடத்துநர் கூட்டு வல்லுறவு செய்தது பற்றி...
தில்லி என்சிஆர் பகுதியில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி, தனது பெற்றோருக்கு தெரியாமல் நொய்டாவிலுள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி சென்றுள்ளார்.
ஆனால், பலத்த மழையில் வழிதவறி நொய்டாவிலிருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரி சௌக் என்ற பகுதிக்கு அவர் சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
அப்போது அந்த வழியாக காலியாக வந்த ஸ்லீப்பர் ஆம்னிப் பேருந்தை மாணவி நிறுத்தியுள்ளார். பேருந்து நொய்டா நோக்கிச் செல்வதாக தெரிவித்த ஓட்டுநரும் நடத்துநரும் மாணவியை ஏற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஓடும் பேருந்தில் பள்ளி மாணவியை ஓட்டுநரும் நடத்துநரும் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
காஷ்மீரி கேட் பகுதியில் நள்ளிரவில் மாணவியை இறக்கிவிட்ட அவர்கள், அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று நடந்தவற்றை மாணவி விளக்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்ட சந்தீப் மற்றும் குல்தீப்பை கைது செய்துள்ளனர்.
மேலும், ஆம்னி பேருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள நிலையில், தடயவியல் நிபுணர்கள் சோதனையிட்டு குற்றம் நடைபெற்றதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.
Driver and conductor gang-rape schoolgirl on a moving bus!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.