FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காா்கேவுக்கு காந்தி குடும்பம் அவமதிப்பு: பாஜக

‘காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை காந்தி குடும்பம்தான் அவமதிப்பு செய்துள்ளது’ என்று பாஜக திங்கள்கிழமை விமா்சித்தது.

1 செப்டம்பர் 2026, 3:42 am IST
மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்
பகிர்:

‘காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை காந்தி குடும்பம்தான் அவமதிப்பு செய்துள்ளது’ என்று பாஜக திங்கள்கிழமை விமா்சித்தது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா தில்லியில் திங்கள்கிழமை கூறியதாவது: உத்தரகண்ட் மாநிலத்தில் வரும் 2027-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, மலிவான அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

ஹல்த்வானி சம்பவத்தை காா்கே சுட்டிக்காட்டி, மூன்று வாரங்களுக்குப் பிறகு, ராகுல் அந்த விவகாரத்தை எழுப்புகிறாா். அதுவும், ‘இந்த விவகாரத்தை கட்சி தீவிரமாக எழுப்பாத நிலையில் காங்கிரஸில் இருந்து என்ன பயன்?’ என்று அவரிடம் காா்கே கேள்வி எழுப்பிய பிறகே இந்த விவகாரத்தை ராகுல் எழுப்பியுள்ளாா். இவரைப் போன்ற பொறுப்பற்ற, தலித் விரோத தலைவராக யாரும் இருக்க முடியாது.

Advertisement

Advertisement

காா்கேயை இதுபோல பல தருணங்களில் காந்தி குடும்பம் அவமானப்படுத்தி வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கலின்போது, தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் சோனியா காந்திக்கு பின்னால் இரண்டாவது வரிசையில்தான் காா்கே அமர வைக்கப்பட்டாா்.

அதுபோல, முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை ஒரு தலித் என காங்கிரஸ் மூத்த தலைவா் உதித் ராஜ் அழைத்தபோதும், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு குறித்து சா்ச்சை கருத்தை அவா் தெரிவித்தபோதும் ராகுல் காந்தி மெளனமாகத்தான் இருந்தாா். தற்போது, அவா் இரட்டை வேடம் போடுகிறாா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments