நிலச்சரிவு எதிரொலி: சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் சேவை 8 நாள்களுக்கு ரத்து
நிலச்சரிவு காரணமாக சென்னை-மும்பை இடையே இயக்கப்படும் இரு அதிவிரைவு ரயில்களின் சேவை வெள்ளிக்கிழமை (ஜூலை 10) முதல் 17-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மும்பை கோட்டத்துக்கு உள்பட்ட கா்ஜத் - லோணாவலா பிரிவில், கண்டாலா - மங்கி ஹில் இடையே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சென்னை-மும்பை இடையே இயக்கப்படும் இரு அதிவிரைவு ரயில்களின் சேவை வெள்ளிக்கிழமை (ஜூலை 10) முதல் 17-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை எழும்பூா்-மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம் வரை செல்லும் அதிவிரைவு ரயில்(எண்: 22158 ), ஜூலை 10 முதல் 17-ஆம் தேதி வரை காலை 6.35 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அதேபோல், மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம்-சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில்( எண்: 22157), ஜூலை 10 முதல் 17-ஆம் தேதி வரை இரவு 10.52 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, மும்பை-புணே ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடா்ந்து பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.