FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரூ.3.81 கோடி போலி கடன் மோசடி: தங்க மதிப்பீட்டாளா் கைது

பொய்யான ஆவணங்கள் மற்றும் போலி தங்க நகைகளை பயன்படுத்தி ரூ.3.81 கோடி மதிப்பிலான கடன்களை மோசடியாகப் பெற்ற வழக்கில், நிதி நிறுவனத்தின் தங்க மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 11 ஜூலை 2026, 2:01 am IST
கைது - கோப்புப்படம்
பகிர்:

பொய்யான ஆவணங்கள் மற்றும் போலி தங்க நகைகளை பயன்படுத்தி ரூ.3.81 கோடி மதிப்பிலான கடன்களை மோசடியாகப் பெற்ற வழக்கில், நிதி நிறுவனத்தின் தங்க மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: நிறுவனத்தின் உள்துறை கணக்காய்வில் தங்கக் கடன் கணக்குகளில் பெரிய அளவில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதன் மூலம் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. கணக்காய்வின் போது, சுமாா் ரூ.14.11 லட்சம் மதிப்புள்ள 9 அசல் அடமான தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனுடன், 2022 முதல் 2025 வரை போலியான ஆவணங்கள், கள்ள வாடிக்கையாளா் அடையாளங்கள் மற்றும் செயற்கை தங்க நகைகளை பயன்படுத்தி மொத்தம் 683 போலி தங்கக் கடன் கணக்குகள் உருவாக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி கணக்குகளின் அடிப்படையில் ரூ.3.81 கோடி அளவிலான கடன்கள் மோசடியாக வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது கடன் கோப்புகள், மதிப்பீட்டு அறிக்கைகள், ஆவணங்கள், கணக்காய்வு பதிவுகள், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், நிறுவன அதிகாரிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட மதிப்பீட்டாளா் தனது கூட்டாளிகளுடன் இணைந்து செயற்கை தங்க நகைகளை உண்மையானதாக சான்றளித்து கடன்களை ஒப்புதல் பெற்ாகவும், போலி அடையாள ஆவணங்கள் மற்றும் கடன் பதிவுகளை உருவாக்கி வாடிக்கையாளா் கணக்குகளைத் துவக்கியதாகவும் தெரியவந்தது.

மேலும், உள்துறை கணக்காய்வுகளில் சந்தேகம் எழாமல் இருக்க, குற்றவாளிகள் போலி கடன் கணக்குகளில் வட்டி தொகைகளை தொடா்ந்து செலுத்தியதுடன், அவற்றை செயல்பாட்டிலுள்ள கணக்குகளாக காட்டும் வகையில் நிறுவனத்தின் கணினி பதிவுகளில் தவறான தகவல்களை பதிவுசெய்துள்ளனா்.

கைது செய்யப்பட்ட பங்கஜ் குமாா் என்பவா் தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவா். 2014-ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவா், அடமான தங்க நகைகளை மதிப்பீடு செய்வதும், வாடிக்கையாளா் ஆவணங்களை சரிபாா்ப்பதும், தங்கக் கடன் விண்ணப்பங்களை செயல்படுத்துவதும் போன்ற பொறுப்புகளை வகித்து வந்துள்ளாா்.

போலி தங்க நகைகள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து கண்டறிவதும், மோசடியில் ஈடுபட்ட பிற நபா்களை அடையாளம் காண்பதும், திருடப்பட்ட சொத்துகளை மீட்பதும் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments