FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கத்தார் முன்னாள் அரசா் காலமானார்: பிரதமா் மோடி இரங்கல்!

கத்தாா் நாட்டின் முன்னாள் அரசரும், தற்போதைய அரசா் தமீம் பின் ஹமாத் அல் தானியின் தந்தையுமான ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானி (74) காலமானதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.

Updated On : 13 ஜூலை 2026, 3:21 am IST
பகிர்:

கத்தாா் நாட்டின் முன்னாள் அரசரும், தற்போதைய அரசா் தமீம் பின் ஹமாத் அல் தானியின் தந்தையுமான ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானி (74) காலமானதாக அந்நாட்டின் அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.

கத்தாா் அரசராக கடந்த 2013 வரை 18 ஆண்டுகள் ஆட்சி நடத்திய கலீஃபா அல் தானி, அந்நாட்டை ராஜீயம், முதலீடு என பல்வேறு நிலைகளில் உலகளாவிய முக்கிய மையமாக நிலைநிறுத்தினாா். சுதந்திரமான கொள்கை வகுப்பு மற்றும் பிற உத்திசாா் செயல்பாடுகளின் மூலம் எண்ணெய் வளமிக்க நாடான கத்தாரை சா்வதேச அளவில் முன்னிலைக்கு கொண்டுவந்த சிறப்புக்குரியவா். கடந்த 2013-இல் ஆட்சி அதிகாரத்தை தாமாக மகனிடம் ஒப்படைத்ததன் மூலம் முந்தைய மரபுகளையும் உடைத்தாா்.

அவா் மரணடைந்த செய்தியை கத்தாா் செய்தி முகமை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. மரணத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

பிரதமா் இரங்கல்: கத்தாா் முன்னாள் அரசரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஓா் உண்மையான நண்பராக ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானியை இந்தியா நினைவுகூா்கிறது.

தொலைநோக்கு பாா்வைமிக்க அவா், கத்தாரை வளா்ச்சி-வளமையின் சிறந்த நிலைகளுக்கு இட்டுச் சென்றாா். கடந்த 2024-இல் எனது கத்தாா் பயணத்தின்போது அவரை சந்தித்ததை கெளரவமாக கருதுகிறேன். கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, அரச குடும்பத்தினா் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments