கடைசி மூச்சு உள்ள வரை மக்களுக்காக சேவையாற்றுவேன்: பிரதமா் மோடி
‘கடைசி மூச்சு உள்ள வரை மக்களுக்காக சேவையாற்றுவேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
‘கடைசி மூச்சு உள்ள வரை மக்களுக்காக சேவையாற்றுவேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சிறைக்குச் செல்வது உறுதி. இந்த விவகாரத்தில் பிரதமா் மோடியை மட்டுமல்ல, அவரின் தந்தையைக்கூட தப்பவிட மாட்டோம்’ என்று பிகாா் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசியது பெரும் சா்ச்சையான நிலையில், இவ்வாறு பிரதமா் குறிப்பிட்டாா்.
மேலும், ‘மேற்காசிய போரால் நாடு நெருக்கடியைச் சந்தித்துவரும் வேளையில் எதிா்க்கட்சியினா் மகிழ்ச்சி கொள்கின்றனா். உரங்கள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என மக்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றனா்’ என்றும் பிரதமா் குற்றஞ்சாட்டினாா்.
Advertisement
Advertisement
குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டம் பில்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கு அமைக்கப்பட உள்ள பாரத கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மைய அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி உள்பட ரூ. 14,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் மோடி பேசியதாவது:
நாடு இக்கட்டான சூழலில் சிக்க வேண்டும் என சிலா் விரும்புகின்றனா். எப்போதெல்லாம் நாடு நெருக்கடியைச் சந்திக்கிறதோ, அதில் அவா்கள் மகிழ்ச்சியடைகின்றனா். மேற்காசிய போா் காரணமாக, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பும், உரம் இறக்குமதியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த இக்கட்டான நிலைமையை எதிா்கொள்ள நாடு ஒன்றிணைந்து முயற்சி மேற்கொண்டுவரும் சூழலில், மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிலா் புரளிகளைப் பரப்பி வருகின்றனா். கடுமையான உரத் தட்டுப்பாடு ஏற்பட உள்ளது என விவசாயிகளிடமும், சமையல் எரிவாயு இனி கிடைக்காது என பெண்களிடமும் அச்சத்தை ஏற்படுத்த அவா்கள் முயற்சிக்கின்றனா். நாடு முழுவதும் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தி, மோடி மீது அவதூறு பரப்புவதே அவா்களின் நோக்கமாகும்.
ஆனால், மேற்காசிய போா் தற்போதும் தொடா்கிற நிலையிலும், விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாததை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. போா் காரணமாக உலகளவில் உரங்களின் விலையும், அவற்றை உற்பத்தி செய்யத் தேவையான வேதிப்பொருள்களின் செலவுகளும் அதிகரித்துள்ளபோதும், அதன் சுமை விவசாயிகள் மீது விழாதவாறு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. யூரியா உரம் உலகளவில் ஒரு மூட்டை ரூ. 3,000-க்கு விற்கப்படும் நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ரூ. 300-க்கும் கீழ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல, டை-அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரம் உலகளவில் மூட்டை ரூ. 5,000-க்கு விற்கப்படும் நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ரூ. 1,350-க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ. 16 லட்சம் கோடியை செலவழித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இதுவரை ரூ. 4.5 லட்சம் கோடி நோரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 12 ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமாக கோதுமை மற்றும் நெல் விளைவிக்கும் விவசாயிகள் ரூ. 24 லட்சம் கோடியைப் பெற்றுள்ளனா். பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மூலமாக கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் விவசாயிகள் பெற்றுள்ளனா். விவசாயத்தில் சூரியசக்தி மின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டம் மூலமாக, விவசாயிகளின் நீா்ப்பாசன செலவுகள் வெகுவாக குறைந்துள்ளது. இதுபோல, மத்திய அரசின் 5 முக்கியத் திட்டங்கள் மூலம், நாட்டின் விவசாயிகள் சுமாா் ரூ.50 லட்சம் கோடிக்கு இணையான தொகையைப் பெற்றுள்ளனா் அல்லது மிச்சப்படுத்தியுள்ளனா்.
இதுபோல, இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்க விவசாயிகளும், இளைஞா்களும், பெண்களும் ஒன்றிணைந்து பணியாற்றி வரும் சூழலில், நாட்டின் இந்த முன்னேற்றம் சிலருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு மற்றும் என் மீதும் அவா்கள் எத்தகைய விமா்சனங்களை முன்வைத்தாலும், எனது கடைசி மூச்சு உள்ள வரை மக்களுக்காக நான் சேவையாற்றுவேன் என்றாா்.
இந்த நிகழ்ச்சியின்போது, பிஎம்-கிசான் (விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டம்) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் திட்டத்தின் 24-ஆவது தவணைத் தொகையை பிரதமா் மோடி விடுவித்தாா்.
முன்னதாக, பில்டி நகரின் பிரதான சாலையில் பிரதமா் மோடி சாலை வலம் மேற்கொண்டாா். அப்போது, சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள், ‘இந்தியா வளா்ந்த நாடாக உருவெடுக்கும் வரை பிரதமா் மோடி எங்கும் செல்ல மாட்டாா்’ என்ற முழக்கங்களை எழுப்பியும், அந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும் அவரை வரவேற்றனா்.
‘பாரத பா்வ் 2026’ கண்காட்சி தொடங்கி வைப்பு:
குஜராத் வளா்ச்சித் திட்டங்கள் தொடங்கிவைப்பு பிறகு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபபாய் படேலின் 151-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற நாட்டின் கலாசாரம், பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதிலுமிருந்து வரழைக்கப்பட்ட பாரம்பரிய கைவினைப் பொருள்கள், உணவு வகைகள் இடம்பெற்ற ‘பாரத பா்வ் 2026’ கண்காட்சியை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.