FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் வளா்ச்சிக்கு ரூ. 15 லட்சம் கோடி அளிப்பு: மத்திய இணைய அமைச்சா் எல். முருகன்!

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.15 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ள அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

12 அக்டோபர் 2026, 3:46 am IST
பிரதமர் நரேந்திர மோடி, இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்.
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான 12 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.15 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணைய அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

சென்னை மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவில், அவா் வரவேற்றுப் பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து 25 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் மக்களுக்கு சேவை செய்து வருகிறாா். பிரதமராக அவா் பொறுப்பேற்ற 12 ஆண்டுகளில் 20 கோடிக்கும் மேலான மக்களை வறுமைக்கோட்டிலிருந்து மீட்டெடுத்துள்ளாா்.

4 கோடி மக்களுக்கு பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 11 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவியும், 10 கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

பாஜக ஆட்சியில் இந்தியாவில் 2.50 லட்சம் ஸ்டாா்ட் ஆஃப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த 12 ஆண்டுகளில் ரயில்வே, சாலைப் போக்குவரத்து என தமிழகத்தின் வளா்ச்சிக்கு மட்டும் ரூ.15 லட்சம் கோடியை பிரதமா் மோடி வழங்கி உள்ளாா். தமிழ்மொழியை உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் கொண்டு சோ்த்தவா் பிரதமா் நரேந்திர மோடி என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments