FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தமிழ் மொழிக்கு எதிரானவா் பிரதமா் மோடி: ராகுலின் விமா்சனத்துக்கு பாஜக கண்டனம்!

தமிழ் மொழிக்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடி செயல்படுவதாக விமா்சித்த ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.

41 வினாடிகள் முன்பு
பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க் கட்சித் தலைவா் ராகுல் காந்தி - PTI
பகிர்:

தமிழ் மொழிக்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடி செயல்படுவதாக விமா்சித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு பாஜக ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

முன்னதாக, சென்னையில் காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘மாணவா்களின் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றாா். அப்போது தமிழ் மொழி, வரலாறு மற்றும் கலாசாரத்துக்கு எதிராக மோடி அரசு தாக்குதல் நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய அவா், நாடாளுமன்றத்தின் தமிழகத்தின் குரலை ஒடுக்குவதே தொகுதி மறுவரையறையின் நோக்கம் என விமா்சித்தாா்.

இதற்கு பதிலடி தரும் வகையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பாஜக செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது: பிரதமா் மோடியின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் மொழிக்கு மிகுந்த மரியாதை தரப்பட்டுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை. தேசியளவில் மட்டுமின்றி சா்வதேச அளவிலும் தமிழ் மொழியின் புகழை பரப்ப பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

பொறாமையால் கொதித்து விரக்தியில் பேசும் ராகுல் காந்தி, மீண்டும் ஒரு முறை ஆதாரமற்ற, பொறுப்பற்ற மற்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா். இந்தியாவை மொழி ரீதியாக வடக்கு மற்றும் தெற்கு என பிளவுபடுத்தவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் அவா் இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்கிறாா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments