தமிழ் மொழி, கலாச்சாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி
தமிழ் கலாச்சாரம், மொழி, வரலாறு, பாரம்பரியம் மீது ழுமு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் கலாச்சாரம், மொழி, வரலாறு, பாரம்பரியம் மீது ழுமு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் குரல் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாநிலமாக சென்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களைச் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் இன்று சென்னை தீவுத்திடலில் மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் 10,000 கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறை வரும்போது ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறேன். ஒருவர் சொல்கிறார் என்பதற்காக எதையும் அப்படியே பின்பற்றாதீர்கள். மாணவர்கள் பகுத்தறிந்து, தாங்கள் விரும்பும் வழியில் செயல்படுங்கள். தமிழ்நாட்டில் இரு பெரும் ஆளுமைகள் திருவள்ளுர், பெரியார்.
Advertisement
Advertisement
உங்கள் கலை, வரலாறு, மண், பாரம்பரியம் உள்ளிட்டவற்றைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். இந்தியை திணிப்போம் என வெளிப்படையாக கூறியவர்தான் அமித் ஷா. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைகிறது. தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது.
தமிழ் கலாச்சாரம், மொழி, வரலாறு, பாரம்பரியம் மீது ழுமு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தமிழ் கலாச்சாரம் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம். புதிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் ரூ 3,300 கோடியை விடுவிப்போம் என்கிறது பாஜக அரசு. கேள்வி கேட்கும் உரிமையையும் வாக்களிக்கும் உரிமையையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் கொண்டு வந்த ‘நீட் ஒழிப்பு' பதாகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கையெழுத்திட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.