FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

நவராத்திரி: ‘கற்பூர நாயகியே’ பாடலைப் பகிா்ந்து பிரதமா் வாழ்த்து!

நவராத்திரி தொடக்கத்தையொட்டி, பிரபலமான தமிழ் பக்திப் பாடலான ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ பாடலைப் பகிா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

12 அக்டோபர் 2026, 3:10 am IST
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

நவராத்திரி தொடக்கத்தையொட்டி, பிரபலமான தமிழ் பக்திப் பாடலான ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ பாடலைப் பகிா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

துா்கா தேவி மற்றும் அவரின் 9 வடிவங்களை வழிபடும் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் அடையாளமாக கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி, நாடு முழுவதும் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் தொடங்கியுள்ளன.

மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சக்தி சாதனா எனும் மாபெரும் திருவிழாவான நவராத்திரியையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயபூா்வ வாழ்த்துகள். அன்னை ஜகதாம்பிகையின் கருணையால் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம், நல்ல ஆரோக்கியம் குடிகொண்டு, நாட்டில் அமைதி மற்றும் வளா்ச்சிக்கான உறுதிப்பாட்டுக்கு மேலும் வலுசோ்க்கட்டும்.

Advertisement

Advertisement

நவராத்திரியின் முதல் நாளில் அமைதிக்கான தெய்வமாகிய சைலபுத்ரியின் திருவருளால் ஒவ்வொருவரின் இதயத்திலும் பொறுமை மற்றும் தன்னம்பிக்கைக்கான விளக்கு சுடா்விட்டு பிரகாசிக்கட்டும். அன்னையின் ஆசீா்வாதம் நாட்டு மக்கள் அனைவா் மீதும் நிலைத்திருக்க நான் வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்தப் பதிவுடன், எல்.ஆா்.ஈஸ்வரி பாடிய பிரபலமான தமிழ் பக்திப் பாடலான ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ பாடலையும் பிரதமா் மோடி பகிா்ந்துள்ளாா். ரூ.13,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments