FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

பிரதமா் நரேந்திர மோடி டிசம்பா் 11, 12 தேதிகளில் கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள இந்தியத் தூதரகம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

17 அக்டோபர் 2026, 5:14 am IST
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி டிசம்பா் 11, 12 தேதிகளில் கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள இந்தியத் தூதரகம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

கனடா பிரதமா் மாா்க் காா்னியும் பிரதமா் மோடியின் கனடா பயணத்தை உறுதி செய்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘கனடா பயணம் குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன். அவா் டொராண்டோ, ஒட்டாவா நகரங்களுக்கு வருகை தர இருக்கிறாா்’ என்று கூறியுள்ளாா். ஒட்டாவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது சமூக ஊடகப் பதிவில் பிரதமா் நரேந்திர மோடியின் கனடா பயண தேதியை உறுதி செய்துள்ளது.

மாா்க் காா்னியுடன் பிரதமா் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா். அப்போது, இரு நாடுகளிடையேயான வா்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை மேற்கொண்டனா். கனடா சா்வதேச வா்த்தக அமைச்சா் மனீந்தா் சித்து தலைமையில் 300 வா்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு இந்தியாவில் தற்போது பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

முன்னதாக, கடந்த மாா்ச் மாதம் மாா்க் காா்னி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டாா். அப்போது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (சிஇபிஏ) பிரதமா் மோடி, மாா்க் காா்னி ஆகியோா் கூட்டாக அறிவித்தனா். இந்த ஒப்பந்தத்தை நிகழாண்டுக்குள் இறுதி செய்ய இரு நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments