வயநாடு நிலச்சரிவில் கடைசியாக தேடப்பட்டவரும் சடலமாக மீட்பு! பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் கடைசியாக தேடப்பட்ட ஒருவரும் மீட்கப்பட்டது பற்றி...
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் கடைசியாகத் தேடப்பட்ட ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமும் இன்று (ஜூலை 12) மீட்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி தனியார் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவால் இதுவரை பலியான ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில், மேலும் காணாமல் போன ஒருவரான ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த கட்டுமான மேலாளர் விக்ரம் ரானாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தன.
Advertisement
Advertisement
தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதால் மீனாட்சி பாலம் வழியாகச் சூரல்மலை-மேப்பாடி பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் இரண்டு மணி நேர இடைவெளியில் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து கேரள வேளாண்மைத் துறை அமைச்சர் சித்திக், “சடலம் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியிருக்கலாம் அல்லது பாறைகளால் மூடப்பட்டிருக்கலாம் என்ற கவலைகள் எழுந்துள்ளன. எனவே, அடையாளம் காணப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் தேடுதல் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மாயமான விக்ரம் ரானா ஏழு நாள் போராட்டத்துக்குப் பிறகு இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The body of a person from Himachal Pradesh was also recovered today (July 12) from the landslide site in Wayanad, Kerala.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.