அமர்நாத் பக்தர்கள் சென்ற வாகனம் ஒன்றோடொன்று மோதல்: 18 பேர் காயம்!
ஜம்மு-காஷ்மீரில் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது தொடர்பாக..
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகளும் ஒரு காரும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் அமர்நாத் பக்தர்கள் உள்பட 18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து காலை 7.20 மணியளவில் சந்தர்கோட் லங்கர் மையத்திற்கு வெளியே நிகழ்ந்தது. பேருந்துகளில் ஒன்றின் பிரேக் பழுதடைந்த நிலையில், அது மற்றொரு பேருந்து மற்றும் காரின் மீது மோதித் தொடர் விபத்தை ஏற்படுத்தியது.
காஷ்மீர் செல்லும் பக்தர்களின் வாகன அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த அந்த மூன்று வாகனங்களும் விபத்தில் சேதமடைந்தன. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை ரம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றினர்.
Advertisement
Advertisement
காயமடைந்த 18 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் ரம்பன் மாவட்ட மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சுதர்ஷன் சிங் கடோச் தெரிவித்தார்.
At least 18 people, most of them Amarnath pilgrims, were injured when two buses and a car collided outside a community kitchen on the Jammu-Srinagar National Highway on Monday, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.