வியத்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்!
வியத்நாம் படகு விபத்தில் பலியான 15 இந்தியர்களின் உடல்கள் இன்று தாயகம் கொண்டு வரப்படுகின்றன.
வியத்நாம் படகு விபத்தில் பலியான 15 இந்தியர்களின் உடல்கள் இன்று தாயகம் கொண்டு வரப்படுகின்றன.
இதுகுறித்து இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளப் பதிவில், "இந்த விமானம் ஹோ சி மின் நகரத்திலிருந்து புறப்பட்டு, இந்திய நேரப்படி இரவு 9. 35 மணிக்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
பலியானவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, அந்தந்த மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
வியத்நாமில் முக்கிய சுற்றுலாத் தீவான ‘ஃபூ குவோக்’ அருகே சனிக்கிழமை அதிவேகப் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 உள்ளூா் படகு பணியாளா்கள் சவாரி செய்தனா். இவா்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் இருந்தனா். திடீரென படகு கவிழ்ந்ததில், பயணிகள் கடலில் விழுந்தனா்.
இந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்திய பயணிகள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதேநேரம், 17 பயணிகள் மற்றும் 4 பணியாளா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அவா்கள், ஃபூ குவோக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்தியாவில் லாவா கைப்பேசி நிறுவனத்தின் கைப்பேசிகளை அதிக அளவில் விற்பனை செய்த முகவா்கள், ஊழியா்கள் என 105 போ் அந்த நிறுவனம் சாா்பில் வியத்நாம் நாட்டுக்கு கடந்த 8-ஆம் தேதி இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்களில் 32 போ் கொண்ட குழுவினா் படகு சவாரி சென்றபோது விபத்து நேரிட்டுள்ளது.
The mortal remains of the 15 Indian tourists killed in a speedboat accident off Vietnam's Phu Quoc Island will be flown back to India on Monday, the Indian Embassy in Hanoi said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.