FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தீவிரமடையுமா பருவமழை?

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது பற்றி..

Updated On : 15 ஜூலை 2026, 11:52 am IST
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - IMD
பகிர்:

வங்கக்கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 14 முதல் 20 ஆம் தேதி வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

ஜூலை 16 முதல் ஜூலை 19 வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இந்த நிலையில், ஒடிசா - மேற்கு வங்கம் இடையே வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அடுத்த இரண்டு நாள்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பலவீனமான தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 7 நாள்களுக்கு இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது.

summary

INSAT-3DR satellite on Wednesday morning captured a massive cloud mass over the northwestern Bay of Bengal...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments