FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!

நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் பிரதமர் நிற்பதாக மத்திய அமைச்சர் பேட்டி...

Updated On : 21 ஜூலை 2026, 12:42 pm IST
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி| சிஜேபி ஆதரவாளர்கள் போராட்டம் - PTI
பகிர்:

நீட் தேர்வு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் பக்கம் நிற்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

”நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் நிற்பதாகப் பிரதமர் கூறினார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வினாத்தாள் கசிவு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரம். இதனை அரசியலாக்கக் கூடாது. வினாத்தாள் கசிவு எங்கு நிகழ்ந்தாலும், மத்திய அரசு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் அமைதிப் பேரணி நடத்த முயற்சித்தனர்.

ஆனால், அவர்களின் பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மேலும், மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளை எறிந்து தாக்குதல் நடத்தினர்.

தில்லி காவல்துறை மற்றும் துணை ராணுவத்தின் செயலுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளைக் கடந்து பல்வேறு தரப்பினர் கண்டனத்தை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Modi stands with students on the NEET issue! Union Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments