பேச்சுவார்த்தைக்குத் தயார்! எங்கள் அலுவலகத்துக்கோ இல்லத்துக்கோ சிஜேபியினர் வரலாம்: ஜெ.பி. நட்டா
பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளது பற்றி...
பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) போராடி வருகின்றனர்.
போராட்டக் களமான ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது தில்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் பேரணியைக் களைத்தனர்.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்ட லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் தனது உண்ணாவிரதத்தைத் தற்போதுவரை தொடர்ந்து வருகிறார்.
இந்தப் போராட்டமானது நாட்டின் பல்வேறு பகுதியில் பரவியுள்ள நிலையில், மாணவர் அமைப்பினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவளித்து தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாகவும் எங்கள் அலுவலகத்துக்கோ அல்லது இல்லத்துக்கோ சிஜேபியினர் வரலாம் எனவும் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
போராட்டம் தீவிரமடைந்து வருவதால் தில்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள கடைகள், அலுவலகங்களை மூட தில்லி வர்த்தக சங்கம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Union Minister J.P. Nadda has stated that they are ready for talks.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.