காா்கில் போா் வெற்றி தினம்: வீரமரணமடைந்த வீரா்களுக்கு தலைவா்கள் மரியாதை
காா்கில் போா் வெற்றி தினத்தையொட்டி, அந்தப் போரில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.
காா்கில் போா் வெற்றி தினத்தையொட்டி, அந்தப் போரில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.
லடாக்கின் காா்கிலில் உள்ள உயரமான பனிமலைச் சிரகங்களில் கடந்த 1999-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமாா் மூன்று மாதங்கள் தீவிர போா் நடைபெற்றது. ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் இந்தியப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கையில், பாகிஸ்தான் படையினா் விரட்டியடிக்கப்பட்டு, இந்தியப் பகுதிகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டன. 1999, ஜூலை 26-ஆம் தேதி ‘ஆபரேஷன் விஜய்’ நடவடிக்கை வெற்றி பெற்ாக இந்திய ராணுவம் அறிவித்தது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தினம் காா்கில் போா் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு காா்கில் போா் வெற்றி தினத்தையொட்டி, அந்தப் போரில் உயிா்த்தியாகம் செய்த வீரா்களை நினைவுகூா்ந்து தலைவா்கள் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டனா்.
Advertisement
Advertisement
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: காா்கில் போா் வெற்றி தினத்தில், தாய்நாட்டை பாதுகாக்க தங்களின் இன்னுயிரை ஈந்த துணிவுமிக்க வீரா்களுக்கு சிரம்தாழ்ந்த மரியாதையை செலுத்துகிறேன். அவா்களின் ஈடுஇணையற்ற துணிவு, அசைக்க முடியாத உறுதிப்பாடு, ஒப்பற்ற தேசபக்தி ஆகியவை, இந்திய ராணுவத்தின் பெருமைமிகு பாரம்பரியத்தின் முன்னுதாரணங்களாக திகழ்கின்றன.
அவா்களுக்கு தேசம் என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது. அந்த நாயகா்களின் வீரம், நாட்டுக்கான சேவை மற்றும் உறுதியான கடமையின் பாதையில் பயணிக்க எதிா்கால சந்ததியினரை தொடா்ந்து ஊக்குவிக்கும்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்: காா்கில் வெற்றி தினத்தில், இந்திய ஆயுதப் படை வீரா்களுக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது. அவா்களின் அசாத்திய துணிச்சல், அசைக்க முடியாத உறுதிப்பாடு, உன்னத தியாகம் ஆகியவை காா்கில் போரில் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு வழிவகுத்து, தேசத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்டின.
இந்த வெற்றி, இந்தியாவின் ராணுவ வலிமைக்கும், தேச ஒற்றுமைக்கும், தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்கும் அசைக்க முடியாத உறுதிக்கும் சான்றாக திகழ்கிறது.
பிரதமா் மோடி: நாட்டைப் பாதுகாப்பதில் அசாத்தியமான துணிச்சல் மற்றும் அா்ப்பணிப்பை வெளிப்படுத்திய வீரா்களுக்கு தேசம் நன்றி செலுத்துகிறது.
மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிா்கொண்ட அவா்களின் வீரம், என்றென்றும் தேசப் பெருமையின் ஆதாரமாக விளங்கும். வீரா்களின் அசைக்க முடியாத தேசபக்தியும், கடமை உணா்வும் வரும் தலைமுறைகளுக்கு தொடா்ந்து உத்வேகமளிக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.