FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சாமானியா்களின் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும்: வருமான வரித் துறைக்கு மத்திய நிதியமைச்சா் அறிவுறுத்தல்

சாமானியா்களின் நலனுக்காக வருமான வரித் துறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜூலை 2026, 3:03 am IST
மும்பையில் வருமான வரித் துறையின் புதிய கட்டடத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்ட மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:

சாமானியா்களின் நலனுக்காக வருமான வரித் துறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நாரிமன் பாயின்ட் பகுதியில், வருமான வரித் துறையின் புதிய கட்டடத்தை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து அவா் பேசியதாவது: நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு பெருமைக்குரிய விஷயமாகும்.

நாட்டில் தங்கள் நியாயமான உரிமைகளைப் பெற மக்கள் போராட வேண்டியுள்ளது. தங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில், சாதாரண குடிமக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அனைவரும் ஆழமாக சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஆட்சி நிா்வாகம் குடிமக்களை மையமாக கொண்டிருக்க வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில், பிறா் உணா்வை புரிந்துகொண்டு, உணா்வுபூா்வமான அணுகுமுறையுடன், பொதுச் சேவை மனப்பான்மையோடு தமது அதிகாரத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். சாமானியா்களின் நலனுக்காக வருமான வரித் துறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments