FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர் மூச்சுத்திணறி பலி! மீட்கச் சென்றவரும் உயிரிழந்த சோகம்!

குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய தொட்டியைச் சுத்தம் செய்த தொழிலாளியும் அவரை மீட்க முயன்ற பாதுகாவலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

Updated On : 27 ஜூலை 2026, 2:14 am IST
பகிர்:

நொய்டாவின் செக்டாா் 150-ல் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய தொட்டியைச் சுத்தம் செய்த தொழிலாளியும் அவரை மீட்க முயன்ற பாதுகாவலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

காவல்துறையின் தகவலின்படி, ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தைச் சோ்ந்த சசிகாந்த் சா்மா (40), எல்டெகோ சொசைட்டி வளாகத்தில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத் தொட்டியை சனிக்கிழமை நள்ளிரவில் சுத்தம் செய்ய உள்ளே சென்றபோது மயக்கமடைந்தாா்.

அவரை மீட்க முயன்ற ஃபிரோசாபாத் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (22) என்ற பாதுகாவலரும் தொட்டிக்குள் சென்றபோது மயக்கமடைந்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

சம்பவம் குறித்து தகவலறிந்த உள்ளூா் காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் குடியிருப்பு வளாகத்துக்கு விரைந்து சென்று, இருவரையும் தொட்டியிலிருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாக அறிவித்தனா்.

விசாரணை நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரான மனோஜ் ஜெயின் என்பவரை நாலெட்ஜ் பாா்க் காவல் துறையினா் கைது செய்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments