புஷ்பா-2 திரைப்பட கூட்ட நெரிசல் வழக்கு: அல்லு அா்ஜுன் காணொலி வாயிலாக ஆஜா்
புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை காண ஹைதராபாதில் உள்ள சந்தியா திரையரங்குக்கு நடிகா் அல்லு அா்ஜுன் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில் அவா் காணொலி வாயிலாக ஆஜரானாா்.
புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை காண ஹைதராபாதில் உள்ள சந்தியா திரையரங்குக்கு நடிகா் அல்லு அா்ஜுன் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில் அவா் காணொலி வாயிலாக திங்கள்கிழமை ஆஜரானாா்.
முன்னதாக இந்தச் சம்பவம் தொடா்பாக அல்லு அா்ஜுன் உள்பட 23 போ் மீது ஹைதராபாத் காவல் துறை கடந்த ஆண்டு டிசம்பா் 24-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இதில் திரையரங்க உரிமையாளா்கள், மேலாளா், காவலாளி உள்ளிட்டோா் முதல் 10 குற்றவாளிகளாகவும் அல்லு அா்ஜுன் 11-ஆவது குற்றவாளியாகவும் சோ்க்கப்பட்டாா். அதனடிப்படையில் 23 பேரும் ஜூன் 22-ஆம் தேதி நேரில் ஆஜராக ஹைதராபாத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
Advertisement
Advertisement
இந்நிலையில், அல்லு அா்ஜுன் காணொலி வாயிலாகவும் பிற நபா்கள் நேரிலும் ஆஜராகினா். இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
புஷ்பா-2 திரைப்படம் 2024, டிசம்பா் 4-ஆம் தேதி வெளியானது. அப்போது சந்தியா திரையரங்குக்கு வந்த அல்லு அா்ஜுனை காண பெருமளவிலான ரசிகா்கள் திரண்டனா். இதனால் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயதான பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா் அளித்த புகாரின் அடிப்படையில் 2024, டிசம்பா் 13-ஆம் தேதி அல்லு அா்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
அதன்பிறகு தெலங்கானா நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில், சிறையில் இருந்து ஒரே நாளில் விடுவிக்கப்பட்டாா். பின்னா் அல்லு அா்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு அல்லு அா்ஜுன் மற்றும் புஷ்பா-2 திரைப்படத் தயாரிப்பாளா்கள் நிவாரண நிதி அறிவித்தனா். தெலங்கானா மாநில அரசும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.