முகப்பு
இந்தியா

இன்றைய செய்திகள் ஜூன் 26 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 26 ஜூன் 2026, 9:36 pm IST
மாரத்தான் - X | CMO TN
பகிர்:

தவெக அரசின் வெளிப்படையான அதிகார முறைகேடு: வெங்கட நாராயணா விவகாரத்தில் சீமான் கண்டனம்

தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 2ஆவது முறையாக தங்கம் விலை உயர்வு!

சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.

தவெக அரசுக்கு அண்ணாமலை வரவேற்பு! திமுக அரசின் ஊழல் விவரங்கள் பட்டியலும் வெளியீடு!!

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீதான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைக்கு தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர்!

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணாவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

நாளை இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.

தவெகவில் சி. விஜயபாஸ்கர் இணைவது தள்ளிப்போகிறதா?

ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்?

திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்!

ஜூலை 1-ல் அதிமுக மகளிரணி கூட்டம்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்னது சரியா? இந்தியாவில் மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் மட்டும்தானா?

நன்கொடை முறைகேடு!

என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் எஸ்ஐஆர் பாடம்!

கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ஜூன் 27 (நாளை) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

காமாக்யா கோயில் திறப்பு!

அஸ்ஸாம், குவாஹாட்டியில் உள்ள காமாக்யா கோயில் மூன்று நாள்களுக்குப் பின்பு இன்று நடை திறக்கப்பட்டது.

திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்!

திருச்சி கிழக்கில் போட்டி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்தால் சொல்கிறேன்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலளித்ததார்.

நல்ல ஆதாரங்களுடன் சிக்கிய எ.வ. வேலு: அமைச்சர் ராஜ்மோகன்

"எ.வ. வேலு மீது வந்த புகாரின்பேரில்தான், துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்ல ஆதாரங்களோடுதான் அவர் சிக்கியிருக்கிறார். 

இந்த வழக்கை எதிர்கொள்வதற்கு அவருக்கு பலம் கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

குஷ்பு -சுந்தர் சி மகள் அவந்திகா திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள் யார், யார்?

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி மூத்த மகள் அவந்திகா - ஷ்ரவன் சீனிவாசன் திருமணம் கோவாவில் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது

திருமணம், விவாகரத்து குறித்து த்ரிஷா சொன்னது என்ன?

நடிகை த்ரிஷா வழக்கமான தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளியுலகில் அதிகம் பேசமாட்டார். தன்னுடைய நடிப்பு, தான் நடித்த படம் மட்டுமே மக்களால் பேசப்பட வேண்டும் என்று விரும்புவார்.

மூன்று பெண்களுடன் தகாத உறவில்.. ஆனால்: ஒப்புக் கொண்ட பில் கேட்ஸ்!

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தன்னுடைய வாழ்வில் குறைந்தது மூன்று பெண்களுடன் தகாத உறவில் இருந்ததை, அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெண்டர் ரத்து!

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வருத்தம் தெரிவித்த ராகுல்!

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் மகனுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை ம.பி. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்?

திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய் அறிவுரை

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஜோசப் விஜய், இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

43 பேருக்கு சிகிச்சை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 43 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்து

சோழவரம் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்தில் இன்று (ஜூன் 26) காலை தீ விபத்து ஏற்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட 15 காவல் அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் பதக்கம் அறிவிப்பு!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாளையொட்டி, போதை ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்டதாக காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் உள்பட 15 பேருக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதக்கங்கள், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் முதல்வரால் வழங்கப்படும்.

வெனிசுவேலா: சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 235 பேர் பலி; 4,300 பேர் காயம்

வெனிசுவேலாவில் வியாழக்கிழமை (ஜூன் 25) நண்பகலில் வெறும் 39 விநாடிகள் மட்டுமே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சுமார் 235 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் கார்லஸ் அல்வராடோ கூறியுள்ளார்.

புணே இளம் தொழிலதிபர் சாவில் திடீர் திருப்பம்!! கொலைத் திட்டத்தை தீட்டியது யார்?

புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பமாக கொலைத் திட்டத்தை தீட்டியது யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஜூன் 26- இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!

சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்: முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றது குறித்து...

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?

தில்லியிலிருந்து அமிருதசரஸ் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தரையிறங்க காத்திருந்த நேரத்தில், பாகிஸ்தான் வான் வெளிக்குள் சென்று வந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments