சத்தீஸ்கர்: வெப்ப அலைக்கு 200 வௌவால்கள் பலி!
சத்தீஸ்கரின் கோர்பாவில் நிலவும் வெப்ப அலை காரணமாக 200 வௌவால்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் கோர்பாவில் நிலவும் வெப்ப அலை காரணமாக 200 வௌவால்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சுமார் 200 வௌவால்கள் இறந்துகிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடும் வெப்ப அலையே இதற்குக் காரணம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பாலி நகர் பஞ்சாயத்தில் உள்ள நௌகோனியா குளக்கரையில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் தஞ்சம் புகுந்திருந்தன.
அதில், ஏராளமான வௌவால்கள் சனிக்கிழமை தரையில் இறந்து கிடப்பதாகவும், பல வௌவால்கள் மரங்களில் உயிரற்றுக் தொங்குவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத் துறையினர் விரைந்தனர் என்று கட்கோரா பிரிவு வன அதிகாரி குமார் நிஷாந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சுமார் 200 வௌவால்கள் பலியாகியுள்ளன. மேலும் அவை வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இறப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய, கால்நடை மருத்துவத் துறை இறந்த உடல்களிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ளது என்றார்.
இதனிடையே வானிலை ஆய்வு மைய தகவலின்படி, கோர்பா பகுதியில் சனிக்கிழமை 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான வௌவால்கள் பாலிக்கு வந்து குளத்தைச் சுற்றி குடியேறும்.
இந்த ஆண்டு, அவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Nearly 200 bats have been found dead at a village in Chhattisgarh's Korba district, with officials suspecting heatwave conditions as the cause.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.