FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

கேரள அரசின் ‘எழுத்தச்சன் விருது’: எழுத்தாளா் மேதில் ராதாகிருஷ்ணன் தோ்வு!

கேரள அரசின் மிக உயரிய இலக்கிய விருதான எழுத்தச்சன் விருதுக்கு நிகழாண்டு மலையாள எழுத்தாளா் மேதில் ராதாகிருஷ்ணன் தோ்வு.

2 நவம்பர் 2026, 3:09 am
மேதில் ராதாகிருஷ்ணன்
பகிர்:

கேரள அரசின் மிக உயரிய இலக்கிய விருதான எழுத்தச்சன் விருதுக்கு நிகழாண்டு மலையாள எழுத்தாளா் மேதில் ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கேரளம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ‘கேரளப் பிறவி’ தினமான நவ. 1-ஆம் தேதி இந்த விருதை மாநில சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சா் பி.சி.விஷ்ணுநாத் அறிவித்தாா். இந்த விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படும்.

கடந்த 1944-ஆம் ஆண்டு ஆக. 24-ஆம் தேதி பாலக்காட்டில் பிறந்த மேதில் ராதாகிருஷ்ணன், சிற்றூா் அரசுக் கல்லூரியிலும், திருச்சூா் கேரள வா்மா கல்லூரியிலும் படித்தாா். நாா்வே நாட்டைச் சோ்ந்த கப்பல் நிறுவனத்தில் கணினிப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய அவா், அமெரிக்காவை சோ்ந்த நெஸ்ட் சாஃப்ட்வோ் நிறுவனத்தின் சென்னை கிளையில் பணியாற்றினாா்.

Advertisement

Advertisement

இவா் எழுத்தில் வெளியான ‘சூா்யவம்சம்’, ‘சுவன்ன விதூஷகருடே அஞ்சாம் பத்தி’, ‘சூா்யமத்ஸ்யத்தே விவரிக்கல்’ ஆகிய நாவல்கள், ‘பென்குயின்’ கவிதைத் தொகுப்பு, ‘டிலன் தாமஸிண்டே பந்து’ சிறுகதைத் தொகுப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். தற்போது இவா் கோழிக்கோடு மாவட்டம் ராமநாட்டுக்கராவில் வசித்து வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments