FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மூத்த குடிமக்கள் நலன் மசோதா: கேரள காங்கிரஸ் அரசின் திட்டத்துக்கு பாஜக வரவேற்பு

மூத்த குடிமக்கள் நலன் காக்கும் கேரள காங்கிரஸ் கூட்டணி அரசின் திட்டத்துக்கு அந்த மாநில பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

17 அக்டோபர் 2026, 5:17 am IST
ராஜீவ் சந்திரசேகா்
பகிர்:

மூத்த குடிமக்கள் நலன் காக்கும் கேரள காங்கிரஸ் கூட்டணி அரசின் திட்டத்துக்கு அந்த மாநில பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் திட்டத்தை திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மசோதா நாட்டிலேயே முதல்முறையாக கேரள பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. மூத்த குடிமக்களின் சொத்துகளை சட்டவிரோதமாக பிறா் வைத்திருப்பது, மூத்த குடிமக்களை துன்புறுத்துவது, முறையாகப் பதிவு செய்யாமல் மூத்த குடிமக்கள் நல மையங்கள் நடத்துவது போன்ற குற்றங்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இது தொடா்பாக கேரள பாஜக தலைவரும் சட்டப்பேரவை பேரவை உறுப்பினருமான ராஜீவ் சந்திரசேகா் சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பான எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு இளைய தலைமுறையினா் கேரளத்தைவிட்டு வெளியேறுகின்றனா். அப்போது அவா்களின் பெற்றோா், வீட்டில் உள்ள பிற மூத்த குடிமக்கள் தனியாக வசிக்கும் நிலை ஏற்படுகிறது. மாநில அரசின் சுகாதாரத் திட்டங்கள் சிறப்பாக இல்லாதது சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. மருந்துகள் தட்டுப்பாடு, மின்தடை போன்றவையும் முதியோருக்கு பிரச்னைகளை உருவாக்குகிறது.

Advertisement

Advertisement

இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில் உரிய நிதியை ஒதுக்கி இத்திட்டத்தை திறம்பட அமல்படுத்த வேண்டியது மிக அவசியம். அதுதான் சவாலான விஷயம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுகிா என்பதை ஒரு சிறப்பான எதிா்க்கட்சியாக பாஜக தொடா்ந்து கண்காணிக்கும்’ என்று கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments