FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!

ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ் நடத்திய என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்...

போலீஸ் என்கவுட்டரில் காயமடைந்த ஹேமந்த்.
பகிர்:

ஆந்திரத்தில் மின் ரம்பத்தால் பள்ளி மாணவியை தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ் நடத்திய என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் கடந்த அக். 31 ஆம் தேதி காலை பாடவேளையில், ஹேமந்த் (21) என்ற இளைஞர் மரம் அறுக்கும் மின்சார ரம்பத்துடன் நுழைந்து, அங்கிருந்த மாணவி கோபிகாவை ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கினார்.

ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தியபோதே நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் அவசர சிகிச்சைக்காக அனந்தபூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அதில், ஒரு மாணவி மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்திய ஹேமந்த் பள்ளியில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அதன்பின்னர், ஆத்மக்கூர் வனப்பகுதிக்குத் தப்பிச் சென்ற ஹேமந்தை காவல்துறையினர் அவரைக் கண்டுபிடித்தனர்.

ஆனால் அவர் வட்ட ஆய்வாளர் வெங்கடேஸ்வரலுவை கத்தியால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், போலீஸ் அதிகாரிகள் ஹேமந்தை தற்காப்புக்காகச் சுட்டதில், அவரது இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த பாதுகாப்புடன் அவர் அனந்தபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைப் பிடித்ததில் ஹேமந்தின் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ரத்த ஓட்டம் பாதித்து திசுக்கள் அழுகத் தொடங்கியதால் அவரை வலது காலை அனந்தபூர் அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அவருக்கு மற்றொரு காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

summary

Andhra school chainsaw attack accused Hemanth's right leg amputated after police encounter; surgery performed at Anantapur Government General Hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments