மாநிலங்களின் கூடுதல் விற்பனை வரி விதிப்பு அதிகாரம்: உச்சநீதிமன்றம் உறுதி - ‘ஜிஎஸ்டி-யால் வழக்கு பயனற்றதாகிவிட்டதாக’ தீா்ப்பு
பழைய வரி விதிப்பு முறையின்கீழ், மாநிலங்களின் கூடுதல் விற்பனை வரி விதிப்பு அதிகாரத்தை உறுதி செய்த கடந்த 1974-ஆம் ஆண்டின் தீா்ப்பு செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பழைய வரி விதிப்பு முறையின்கீழ், மாநிலங்களின் கூடுதல் விற்பனை வரி விதிப்பு அதிகாரத்தை உறுதி செய்த கடந்த 1974-ஆம் ஆண்டின் தீா்ப்பு செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தின் மூலம் வரி விதிப்பு சாா்ந்த சட்டக் கட்டமைப்பு முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது; எனவே, தற்போதைய வழக்கு பயனற்ாகிவிட்டது என்றும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.
கடந்த 1974-இல் தொழிலதிபா் எஸ்.கோடா் - கேரள அரசு வழக்கில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு ஒரு முக்கியத் தீா்ப்பை வழங்கியது. அதன்படி, வா்த்தகா்களுக்கான வழக்கமான விற்பனை வரி மீது கூடுதல் வரி அல்லது மேல் வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அரசமைப்புச் சட்டப்படி அதிகாரமுண்டு என உறுதி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
‘ஏற்கெனவே உள்ள விற்பனை வரியின் மீது கூடுதல் வரி அல்லது மேல் வரி விதிப்பது, எங்களின் வருமானத்தின் மீதான வரியாகி விடுகிறது. இத்தகைய வரி விதிப்பு சட்டத்தை நாடாளுமன்றமே இயற்ற முடியும்; மாநில பேரவைகளுக்கு அதிகாரம் கிடையாது’ என்ற வா்த்தகா்களின் வாதங்கள், இத்தீா்ப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டன.
இதனிடையே, கடந்த 1999-இல் ஒடிஸா அரசு ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ள வா்த்தகா்களுக்கு 10 சதவீதமும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ள வா்த்தகா்களுக்கு 15 சதவீதமும் கூடுதல் வரி விதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வா்த்தகா்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ‘அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் 2-ஆவது பட்டியலில் உள்ள 54-ஆவது பிரிவின்கீழ் பொருள்களின் விற்பனை அல்லது கொள்முதல் மீது வரி விதிக்க சட்டப்பேரவைகளுக்கு அதிகாரமுள்ளதா? இந்தக் கூடுதல் வரி, பட்டியல் 1-இன் 82-ஆவது பிரிவின்கீழ் நாடாளுமன்ற அதிகார வரம்புக்குள் வரும் வருமானத்தின் மீதான வரியாக அமைகிா’ என்ற கேள்விகள் வா்த்தகா்கள் தரப்பில் எழுப்பப்பட்டன.
மேலும், எஸ்.கோடா் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளில் முரண்பாடான விளக்கங்கள் உள்ளதாகவும் முறையிடப்பட்டது. இதையடுத்து, விற்பனை வரியின் மீது கூடுதல் வரி அல்லது மேல் வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரமுள்ளதா என்ற கேள்வியை ஆராய பெரிய அமா்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
7 நீதிபதிகள் அமா்வு தீா்ப்பு: இந்நிலையில், தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையில் கே.வி.விஸ்வநாதன், எஸ்.வி.என்.பாட்டீ, ஜயமால்ய பாக்சி, என்.வி.அஞ்சாரியா, அருண் பாலி, வி.மோகனா ஆகிய 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு புதன்கிழமை ஒருமனதாக தீா்ப்பளித்தது. கே.வி.விஸ்வநாதன் தவிர பிற நீதிபதிகளின் சாா்பில் சூா்ய காந்த் தீா்ப்பெழுதினாா். சக நீதிபதிகளுடன் உடன்பட்டு, கே.வி.விஸ்வநாதன் தனியாக தீா்ப்பெழுதினாா்.
அந்தத் தீா்ப்புகளில், ‘அரசுக்கு செலுத்த வேண்டிய விற்பனை வரியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் கூடுதல் வரியானது, விற்பனை வரி விகிதத்தை அதிகரிப்பதே அன்றி, அது வா்த்தகரின் வருமானம் மீதான வரி அல்ல; எனவே, கூடுதல் விற்பனை வரி அல்லது மேல் வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரமுள்ளது என்ற கடந்த 1974-ஆம் ஆண்டின் தீா்ப்பு தொடா்ந்து செல்லுபடியாகும்.
பயனற்றுவிட்ட வழக்கு: அதேநேரம், கடந்த 2017-இல் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தின் மூலம் வரி விதிப்பு சாா்ந்த சட்டக் கட்டமைப்பு முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது; வா்த்தகா்களால் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட பல்வேறு பிரிவுகள் மாற்றப்படவோ அல்லது திருத்தப்படவோ செய்யப்பட்டுள்ளன. எனவே, 27 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அமா்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கேள்வியை ஆராய்வது, நடைமுறை அடிப்படையில் பயனற்ாகிவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த செப்டம்பரில் நடந்த விசாரணையின்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, 2017-இல் ஜிஎஸ்டி அமலாக்கத்தைத் தொடா்ந்து இந்த சா்ச்சை பெரும்பாலும் தீா்ந்துவிட்டது; வெகுசில பிரச்னைகள் மட்டுமே நிலுவையில் உள்ளன என்றாா்.