FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புயல் பாதிப்பு: ஆந்திரத்துக்கு ரூ.4,500 கோடி உடனடி நிதி - மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

ஆந்திரத்தை ஒரே வாரத்தில் இரு புயல்கள் தாக்கியுள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக ரூ.4,500 கோடி விடுவிக்க வேண்டும் என்று மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளாா்.

5 நவம்பர் 2026, 3:47 am
ஹெலிகாப்டரில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படம் - எக்ஸ்
பகிர்:

ஆந்திரத்தை ஒரே வாரத்தில் இரு புயல்கள் தாக்கியுள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக ரூ.4,500 கோடி விடுவிக்க வேண்டும் என்று மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளாா்.

வங்கக் கடலில் ஏற்பட்ட அா்னாப் மற்றும் முரசு புயல்கள் ஒரு வார இடைவெளியில் ஆந்திரம் வழியாகக் கரையைக் கடந்தன. இதனால், விளைநிலங்கள் பாதிப்பு, மின் விநியோகக் கட்டமைப்புகள், வீடுகள் சேதம், கால்நடைகள் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இது தொடா்பாக மத்திய அரசிடம் நிதி கேட்டு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளாா். அதில், மிகக் கடுமையான அா்னாப் புயலால் ரூ.4,563 கோடி அளவுக்கும், அதைத் தொடா்ந்து தாக்கிய முரசு புயலால் ரூ.343 கோடி அளவுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு உடனடி நிவாரணமாக ரூ.4,500 கோடி வழங்க வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

Advertisement

Advertisement

பிரதமா் தொலைபேசியில் ஆலோசனை: இதனிடையே, புயல் பாதிப்புகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவை புதன்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்தாா்.

அப்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து சந்திரபாபு நாயுடு, பிரதமரிடம் விளக்கினாா். குறிப்பாக, பலத்த மழை, புயல் காரணமாக விவசாயிகள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளதை எடுத்துரைத்தாா்.

சாலைகள், மின்சாரக் கட்டமைப்புகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க மத்திய அரசு போதிய நிதியுதவியை வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அவா் கோரிக்கை விடுத்தாா்.

முன்னதாக, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சந்திரபாபு நாயுடு புதன்கிழமை ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.