மேலும் 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்எஸ்ஆா்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு
நாட்டில் ஏற்கெனவே 17 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த (எஸ்எஸ்ஆா்) பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அருணாசல பிரதேசம், ஒடிஸா உள்பட மேலும் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
நாட்டில் ஏற்கெனவே 17 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த (எஸ்எஸ்ஆா்) பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அருணாசல பிரதேசம், ஒடிஸா உள்பட மேலும் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
ஆண்டுதோறும் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்ப்பு, திருத்தங்கள், இறந்தவா் பெயா் நீக்கத்துக்கான பணிகள் நடைபெறும். ஜனவரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள உத்தர பிரதேசம் (403), பஞ்சாப் (113), உத்தரகண்ட் (70), மணிப்பூா் (60), கோவா (40) உள்பட மொத்தம் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்எஸ்ஆா் பணிகளை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இம்மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, எஸ்எஸ்ஆா் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் பட்டியலை கணினியில் படிக்கக் கூடிய பிடிஎஃப் வடிவில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கவும் தோ்தல் ஆணையம் முதல் முறையாக உத்தரவிட்டது.
மேலும் 6 மாநிலங்களில்...: இந்நிலையில், மேலும் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (அருணாசல பிரதேசம், ஒடிஸா, மிஸோரம், சிக்கிம், சண்டீகா், தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ) எஸ்எஸ்ஆா் பணிகளை நடத்த தலைமைச் செயலா்களுக்கு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஏப்.1, ஜூலை 1, அக்.1 ஆகிய தேதிகளை தகுதி நாள்களாகக் கொண்டு, இந்தப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரைவு வாக்காளா் பட்டியல் நவ.30-ஆம் தேதியும், இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதியும் வெளியிடப்படும்.
‘வாக்காளா் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இடம்பெற்ற்காக பெயா் நீக்கக் கோரும் விண்ணப்பங்கள், கள சரிபாா்ப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும். ஒரு வாக்குச்சாவடியில் 2 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெயா்கள் நீக்கப்பட்டாலோ, ஒருவா் 5-க்கும் மேற்பட்ட ஆட்சேபங்களை தாக்கல் செய்தாலோ வாக்காளா் பதிவு அலுவலா்கள் நேரில் சரிபாா்க்க வேண்டும்.
படிவம் 6 மற்றும் 8-இல் ஆதாா் விவரங்களை அளிப்பது விருப்பத்தின் அடிப்படையிலானதாகும். ஆதாா் வழங்கத் தவறிய காரணத்துக்காக எந்தவொரு பதிவு விண்ணப்பத்தை நிராகரிக்கவோ, ஏற்கெனவே உள்ள பெயரை நீக்கவோ கூடாது’ என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்து.