பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளய்’ ஏவுகணையின் சோதனையை இந்தியா வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளய்’ ஏவுகணையின் சோதனையை இந்தியா வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.
பாலிஸ்டிக் ரக ஏவுகணைக்கு இணையான இந்த ஏவுகணையின் சோதனை ஓடிஸாவில் உள்ள டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) தயாரிக்கப்பட்ட ‘பிரளய்’ பாலிஸ்டிக் ஏவுகணை குறுகிய தூரத்தில், தரையிலிருந்து தரை இலக்கை குறி வைத்து தாக்கி அழிக்கும் திறனுடையது. 500 கிலோ முதல் 1,000 கிலோ எடையுள்ள வெடிபொருளை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல்வகையான தாக்குதலைகளை முறியடிக்கக் கூடியது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் பாராட்டு தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.