FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

வட கொரியாவின் புதிய அதிநவீன ஏவுகணை சோதனை

நடுத்தர அளவிலான தொலைவு வரை சென்று தாக்கும் புதிய அதிநவீன ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை வட கொரியா சனிக்கிழமை சோதனை செய்துள்ளது.

பகிர்:

நடுத்தர அளவிலான தொலைவு வரை சென்று தாக்கும் புதிய அதிநவீன ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை வட கொரியா சனிக்கிழமை சோதனை செய்துள்ளது.

வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வான்சானில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 700 கி.மீ.க்கும் அதிகமான தொலைவு பாய்ந்து சென்று, ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் விழுந்துள்ளது.

வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னின் நேரடி மேற்பாா்வையில் சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை குறித்து அவரின் சகோதரி சகோதரி கிம் யோ ஜோங் மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

அமெரிக்க நட்பு நாடுகள் இந்த ஏவுகணை பறக்கும் பாதையைத் துல்லியமாகக் கண்காணிக்கத் தவறிவிட்டன. ஏனெனில், தென் கொரியா, ஜப்பான் நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி, ஊடுருவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த உயரத்தில் பறக்கும்போதே திசையை மாற்றும் ஆற்றலையும், குறிப்பிட்ட ஏ.ஐ. தொழில்நுட்பத் திறன்களையும் கொண்டுள்ளதால் இதை இடைமறித்து அழிப்பது மிகவும் கடினம் என்றாா்.

summary

North Korea's new state-of-the-art missile test

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments