பாகிஸ்தானின் அதிநவீன ‘ஃபதா - 3’ ஏவுகணை சோதனை வெற்றி!
பாகிஸ்தானின் அதிநவீன ‘ஃபதா - 3’ ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது பற்றி...
பாகிஸ்தானின் அதிநவீன ஏவுகணையான ’ஃபதா-3’ சூப்பர்சோனிக் ஏவுகணையை அந்நாட்டு ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு போட்டியாக பாகிஸ்தானின் ஃப்தா ஏவுகணைகள் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், ‘ஃபதா - 3’ ஏவுகணை சோதனை புதன்கிழமை நடத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக பாகிஸ்தானின் முப்படைகள் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“பாகிஸ்தான் ராணுவம் ஃபதா-3 சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இது பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
ஃபதா-3 ஏவுகணையானது மேம்பட்ட வழிசெலுத்தல் மற்றும் உந்துவிசை அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது சூப்பர்சோனிக் வேகத்தில், அதிகத் துல்லியத்துடனும், அழிக்கும் திறனுடனும் நீண்ட தூர இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை, பாகிஸ்தான் ராணுவத்தின் ராக்கெட் படைப் பிரிவின் தாக்குதல் வரம்பை கணிசமாக மேம்படுத்தி, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலையை மேலும் வலுப்படுத்தும்.
ஃபதா-3 ஏவுகணை சோதனை வெற்றிக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி முனீர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.