FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒடிசா நிலச்சரிவில் மேலும் 2 உடல்கள் கண்டெடுப்பு! பலி 4 ஆக உயர்வு! 9 பேர் மாயம்

ஒடிசா நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு...

நிலச்சரிவு
பகிர்:

ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மலைக்கிராமம் ஒன்றில், மேலும் இரண்டு உடல்கள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் அங்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒன்பது பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

கஞ்சாம்-கந்தமால் எல்லைக்கு அருகில் உள்ள பஞ்சநகர் தொகுதியின் பைபாலி பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிரிபபாலி கிராமத்தில் அக்டோபர் 28 அன்று அதிகாலை ஏற்பட்ட புயல், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய தேடுதல் மற்றும் மீட்புப் பணியின்போது, ​​இன்று அதிகாலையில் சிதைந்த நிலையில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. கிரிபபாலி கிராமத்தில் இந்த உடல்கள் கண்டறியப்பட்டது. முன்னதாக, இந்த பேரிடரில் நான்கு பேர் உயிரிழந்ததை அரசு உறுதிப்படுத்தியிருந்தது; இதில் கந்தமால் மாவட்டத்தில் மூவரும், கஜபதி மாவட்டத்தில் ஒருவரும் அடங்குவர்.

Advertisement

Advertisement

மலை உச்சியில் அமைந்திருந்த அந்த கிராமத்தில், பாறைகள், வேரோடு சாய்ந்த மரங்கள் மற்றும் சேற்றுக்கு அடியில் வீடுகள் புதைந்தன. அதே நேரத்தில் மலைச்சரிவிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்தது.

ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கை படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை மாநில அரசு பணியில் ஈடுபடுத்தியது. மோசமான வானிலை காரணமாக, புதன்கிழமை அன்று மீட்புப் பணிகள் ஒரு நாள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.