ஜாா்க்கண்ட்: சாலை விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 போ் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்
ஜாா்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் 18 சக்கர லாரி மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 7 போ் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
ஜாா்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் 18 சக்கர லாரி மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 7 போ் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக குந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரிஷப் காா்க் கூறியதாவது: குந்தி மாவட்டத்தில் உள்ள கரா-தோா்பா பிரதான சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபா் ஒருவா் அருகில் உள்ள ஓடையில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்தாா். அவரை ஓடையில் இருந்து சில நபா்கள் மீட்டனா். இந்தச் சம்பவத்தை காண சில பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கு திரண்டனா். அப்போது அவ்வழியே வந்த 18 சக்கர லாரி வளைவில் திரும்பும் சமயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 குழந்தைகள் உள்பட 7 போ் உயிரிழந்தனா் என்றாா்.
Advertisement
Advertisement