FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜார்கண்டில் லாரி மோதி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த மக்கள் கூட்டத்திற்குள் 18 சக்கர லாரி புகுந்து மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானது குறித்து...

ஜார்கண்டில் லாரி மோதி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி - கோப்புப்படம்
பகிர்:

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில், அதிவேகமாக வந்த 18 சக்கர லாரி மோதியதில் 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உள்பட குறைந்தது 7 பேர் பலியாகினர்; ஒரு பெண் படுகாயமடைந்ததாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

விபத்து குறித்து குந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷப் கார்க் கூறியதாவது:

வியாழக்கிழமை இரவு கர்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ரா-தோர்பா பிரதான சாலையில் ஒரு ஸ்கூட்டி ஓட்டி வந்தவர் விபத்தில் சிக்கியுள்ளார். அவருக்கு உதவுவதற்காகவும், விபத்தை பார்ப்பதற்காகவும் அருகில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலையோரகத்தில் கூடி நின்றுள்ளனர். அப்போது, தோர்பா பகுதியில் இருந்து கர்ரா நோக்கி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதி வேகத்தில் வந்த 18 சக்கர லாரி, சாலையோரம் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் மீது மோதியுள்ளது.

Advertisement

Advertisement

இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார். பலியானவர்களில் 3 பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் உள்பட 7 பேர் பலியாகினர்.

படுகாயமடைந்த பெண் குந்தி சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று குந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ரிஷப் கார்க் தெரிவித்தார்.

விபத்தை ஏற்படுத்தியவர் லாரியின் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும், லாரியை அஜாக்கிரதையாக அதிவேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என சம்பவ இடத்தில் இருந்தோர் குற்றம் சாட்டினர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், விபத்து நடந்தவுடன் தப்பிச் சென்ற லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை தேடி வருகின்றனர்.

At least seven people, including three children and three women, were killed and one injured after being run over by a speeding 18-wheel truck in Jharkhand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.