20 கிலோ ஹெராயின், 14 துப்பாக்கிகள் பறிமுதல்: ராணுவ வீரர் உள்பட 7 பேர் கைது!
சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச் சம்பவங்களை முறியடித்த பஞ்சாப் காவல்துறையினர் ராணுவ வீரர் உள்பட 7 பேரைக் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச் சம்பவங்களை முறியடித்த பஞ்சாப் காவல்துறையினர் ராணுவ வீரர் உள்பட 7 பேரைக் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 14 நவீனரக துப்பாக்கிகள் மற்றும் 20 கிலோவிற்கும் அதிகமான ஹெராயின் போன்றவற்றையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்கள் வெளிநாட்டில் உள்ள ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததும், அந்த நபர் ஒரு திட்டமிட்ட வலைப்பின்னல் மூலம் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுதங்களை விநியோகிக்க உதவியதும் தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
இதில், பஞ்சாபில் உள்ள ரானிகே கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் யுத்வீர் சிங் (22) உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வலைப்பின்னலை முழுமையாகக் கண்டறிந்து, அதன் பின்னணியில் உள்ள தொடர்புகளை வெளிக்கொண்டுவர தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாகப் பேசிய காவல்துறை ஐஜி குர்பிரீத் சிங் புல்லர், ”முதல்கட்ட நடவடிக்கையின் போது, கரிந்தா காவல் நிலையக் குழுவினர் உதய் மற்றும் பாத்ராஸ் என்கிற இருவரைக் கைது செய்தனர். இவர்கள் ட்ரோன் மூலம் வீசப்பட்ட துப்பாக்கிகளை பெற்றுக்கொண்டு, கேம்கரன் பகுதிக்குச் சென்றபோது பிடிபட்டனர்.
இவர்கள் இருவரும் இதற்கு முன்பு சுமார் 20 முதல் 25 முறை ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டுவிநியோகம் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டாவது நடவடிக்கையில், அமிர்தசரஸ் சிஐஏ குழு மற்றும் கரிந்தா காவல் நிலைய அதிகாரிகள் இணைந்து விடுப்பில் ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர் யுத்வீர் சிங்கை கைது செய்தனர். அவரிடமிருந்து போர் ரக கைத்துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. யுத்வீர் சிங் ஏற்கனவே ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்.
எல்லை தாண்டிய கடத்தலில் ஈடுபட்ட அவரது நடவடிக்கை தொடர்பான விரிவான அறிக்கை ராணுவ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மூன்றாவது நடவடிக்கையில், கரிந்தா காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சஜன் சிங் மற்றும் சாஹில்பிரீத் என்கிற இருவரை வழிமறித்து, அவர்களிடமிருந்து 20.130 கிலோ ஹெராயினைப் பறிமுதல் செய்தனர்” என்று அவர் தெரிவித்தார்.
மற்றொரு நடவடிக்கையில், இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
20 kg of heroin and 14 firearms seized; 7 people, including an army soldier, arrested!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.