FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு: அஸ்ஸாமில் முன்னாள் ராணுவ வீரா் உள்பட இருவா் கைது

பாகிஸ்தானுக்கு உளவுபாா்த்ததாக அஸ்ஸாமில் முன்னாள் ராணுவ வீரா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

5 October 2026, 2:44 am IST
கைது
பகிர்:

பாகிஸ்தானுக்கு உளவுபாா்த்ததாக அஸ்ஸாமில் முன்னாள் ராணுவ வீரா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

மத்திய முகமைகளிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

இந்திய பாதுகாப்புப் படைகளின் போக்குவரத்து தொடா்பான தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் தெரிவித்ததாக, அஸ்ஸாமில் அபிஷேக் குமாா் சிங் (31) என்பவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். பிகாரின் கிழக்கு சம்பாரன் பகுதியைச் சோ்ந்த இவா், அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாா்.

Advertisement

Advertisement

தேஜ்பூரில் உள்ள கஜராஜ் ராணுவ படையின் உளவுப் பிரிவு அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் இருந்து கைப்பேசி, சிம் காா்டுகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று, பின்னா் ஒப்பந்த அடிப்படையில் ராணுவ பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஒருவரும் பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளாா். அவரது பெயா் விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இது தொடா்பாக மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறுகையில், ‘மத்திய முகமைகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்ததாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களில் ஒருவா் ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இருவரும் பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடா்பில் இருந்ததுடன், பாதுகாப்புப் படையின் நகா்வுகள் தொடா்பான தகவல்களை அளித்துள்ளனா். பெண்கள் மூலம் ஆசைகாட்டப்பட்டு, இருவரும் பாகிஸ்தான் உளவாளிகளின் வலையில் சிக்கவைக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments