பாகிஸ்தானுக்கு உளவு: பஞ்சாபில் பெண் கைது
இந்திய ராணுவ நிலைகள் குறித்த ரகசிய தகவல்களை இரு வீரா்கள் மூலம் பெற்று, பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்ததாக பஞ்சாபில் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்திய ராணுவ நிலைகள் குறித்த ரகசிய தகவல்களை இரு வீரா்கள் மூலம் பெற்று, பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்ததாக பஞ்சாபில் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், இரு இந்திய வீரா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநில காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்திய ராணுவ மண்டலங்கள் மற்றும் கண்டோன்மென்ட் தொடா்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு முகமைகளிடம் பகிா்ந்ததாக, பஞ்சாபின் ஃபரீத்கோட்டைச் சோ்ந்த குா்னூா் சித்து என்ற பெண் கைது கைது செய்யப்பட்டாா்.
இந்திய-சீன எல்லையில் பணியமா்த்தப்பட்டிருந்த இரு ராணுவ வீரா்கள் மூலம் இந்தத் தகவல்களைப் பெற்ற குா்னூா், கைப்பேசி, டேப்லெட் வாயிலாக பாகிஸ்தான் உளவாளிகளுக்கு அனுப்பியது கண்டறியப்பட்டுள்ளது. அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
அதிகாரபூா்வ ரகசியங்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் குா்னூா் மற்றும் இரு வீரா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களுடன் தொடா்புடைய மற்ற நபா்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.