FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

மகாராஷ்டிரம் மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியானது தொடர்பாக...

11 செப்டம்பர் 2026, 10:39 am IST
மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி - கோப்புப்படம்
பகிர்:

பண்டாரா: மகாராஷ்டிரம் மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை(செப்.11) சரக்கு லாரி மற்றும் எஸ்யூவி கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்பட எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்து குறித்து போலீசார் கூறியதாவது:

மகாராஷ்டிரம் மாநிலம் பண்டாரா மாவட்டம் லக்னி தாலுகாவில் உள்ள மானேகான் மற்றும் பிம்பல்கான் பகுதிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பொலிரோ எஸ்யூவி கார் ஒன்று ஈச்சர் சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று குழந்தைகள் உள்பட எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியானவர்களின் உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியானவர்கள் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 53 வழியாக நாக்பூருக்கு வந்து கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Eight persons, including three children, were killed in an accident involving a truck and a Sport Utility Vehicle (SUV) in Maharashtra's Bhandara district early on Friday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments