மணிப்பூரில் கணக்கில் வராத 4,000 ஆயுதங்கள் மீட்பு!
மணிப்பூரில் கணக்கில் வராத 4,000-க்கும் மேற்பட்ட கூடுதலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் கணக்கில் வராத 4,000-க்கும் மேற்பட்ட கூடுதலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில், அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் அங்கு புதிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளனர்.
மணிப்பூரில் காவல்துறையிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் 85% வரை கைப்பற்றப்பட்ட நிலையில், அதனுடன் கூடுதலாக 4,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதை உறுதிப்படுத்திய பாதுகாப்புத் துறையினர், ஆயுத விநியோகச் சங்கிலிகளுக்கு மியான்மர் எல்லையைக் கடந்து தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.
உளவு அமைப்புகளுடன் இணைந்து இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு வியூகங்களை மறுசீரமைக்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் காவல் நிலையங்களிலிருந்து மொத்தமாக 6,020 ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 5,066 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 954 ஆயுதங்கள் கண்டுபிடிக்கபடவில்லை. அவை பயங்கரவாதக் குழுக்களிடமோ, சமூக விரோதிகளிடமோ கிடைத்திருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், காவல்துறையிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களைத் தவிர கூடுதலாக 4,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது, பாதுகாப்புப் படையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மாநிலத்தின் பாதுகாப்பிற்கும் சவாலை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளது.
இதன்மூலம், சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கடத்தும் வலைப்பின்னல்கள் தீவிரமாக இயங்கி வருவது உறுதியாகியுள்ளது. ஆனால், அதன் முழுமையான நடவடிக்கைகள் பற்றியத் தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த ஆயுதங்களில் கணிசமானவை அண்டை நாடான மியான்மரிலிருந்து மணிப்பூருக்குள் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சில ஆயுதங்களை அவற்றின் தயாரிப்பு மற்றும் சிறப்பம்சங்களைக் கொண்டு அடையாளம் காண முடிந்தாலும், அவை எங்கிருந்து வந்தன மற்றும் எந்தப் பாதையில் கொண்டு வரப்பட்டன என்பதை உறுதிப்படுத்த விரிவான விசாரணை தேவைப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆயுத விநியோகச் சங்கிலியை உடைக்க பாதுகாப்புப் படையினர் உளவுத்துறை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.