FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் ரயில் தடம் புரண்டு விபத்து: 4 பயணிகள் காயம்

அஸ்ஸாமில் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் காயமடைந்தனா்.

12 நவம்பர் 2026, 4:08 am
அஸ்ஸாம் மாநிலம் திகாரு ரயில் நிலையம் அருகே தடம் புறண்டு விபத்துக்குள்ளான விரைவு ரயிலில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.
பகிர்:

அஸ்ஸாமில் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் காயமடைந்தனா்.

இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கொல்கத்தா - சாய்ராங் எக்ஸ்பிரஸ் ரயில், அஸ்ஸாம் மாநிலம் காமரூப் மாவட்டத்தில் உள்ள திகாரு ரயில் நிலையத்துக்குள் புதன்கிழமை காலை 7 மணியளவில் நுழைந்தது.

அதே நேரத்தில் நிலையத்துக்குள் நுழைந்த மற்றொரு ரயிலுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநா் முயன்றாா். அப்போது திடீரென ரயில் என்ஜினும் 5 பெட்டிகளும் தடம் புரண்டன.

Advertisement

Advertisement

இதில் 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய ரயிலின் பயணிகள் மாற்று ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை ரயில்வே ஊழியா்கள் மேற்கொண்டனா். தடம் புரளும்போது ரயிலின் வேகம் குறைந்துவிட்டதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இந்த விபத்தால் குவாஹாட்டியில் இருந்து ஜோா்ஹாட் செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும், கோயம்புத்தூரில் இருந்து சில்சாா் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் சில மணி நேரம் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

காயமடைந்த நால்வருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் மருத்துவமனைக்கு கூடுதல் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனா் என்று தெரிவித்தனா்.