தில்லியில் 11 கி.மீ. நீள சட் பூஜை படித்துறை திறப்பு: கேஜரிவாலின் ‘சீஷ்மஹால்’ குறித்து பாஜக தலைவா் விமா்சனம்
தில்லியில் உள்ள ஷாலிமாா் பாகில் முனக் கால்வாயையொட்டி 11 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சட் பூஜை படித்துறைகளை பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், முதல்வா் ரேகா குப்தா ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.
தில்லியில் உள்ள ஷாலிமாா் பாகில் முனக் கால்வாயையொட்டி 11 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சட் பூஜை படித்துறைகளை பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், முதல்வா் ரேகா குப்தா ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் நிதின் நபின் பேசியதாவது: முந்தைய ஆம் ஆத்மி அரசு தனக்காக ‘சீஷ்மஹால்’ மட்டுமே கட்டுவதில் கவனம் செலுத்தியது. ஆனால், தற்போதைய பாஜக அரசு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நகரம் முழுவதும் சட் பூஜை படித்துறைகளை அமைத்து வருகிறது. தில்லியில் பாஜக அரசு பொறுப்பேற்று 20 மாதங்களிலேயே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.
இந்தியாவின் சனாதன மரபுகள் மற்றும் கலாசாரத்தின் மீது கேள்விகள் எழுப்பப்பட்ட காலம் இருந்தது. பகவான் ராமரின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியவா்கள் இங்கு இருந்தனா். கங்கை, சட் பூஜை, யமுனை ஆகியவற்றின் சிறப்பை அவா்கள் எவ்வாறு புரிந்துகொள்வாா்கள்? அவா்களுக்கு இவை வெறும் நதிளாகவோ, குளங்களாகவோ தெரியலாம். ஆனால், நம்மைப் பொறுத்தவரை இவை வழிபாட்டுக்கும் பக்திக்கும் உரியவை என்றாா்.
Advertisement
Advertisement
தில்லி பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறியதாவது: பூா்வாஞ்சல் சமூகத்தினா் தங்களது கடின உழைப்பால் இந்த நகரத்தை உருவாக்கியுள்ளனா். பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி, மண் குவியல், குப்பைகள் மற்றும் துா்நாற்றத்துடன் காணப்பட்ட இந்தக் கால்வாய்ப் பகுதி தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இங்கு படித்துறைகள், மின்விளக்கு வசதிகள், அகலமான சாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 30,000-க்கும் மேற்பட்டோா் இங்கு திரண்டு வழிபாடு நடத்த முடியும் என்றாா்.
சட் பூஜைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக முனக் கால்வாயின் வட பகுதிகளை தில்லி அரசு சீரமைத்துள்ளது. அங்கு உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், போதிய மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பக்தா்களுக்கு சுத்தமான நீா் கிடைப்பதையும், பூஜையின்போது நீரோட்டம் தடையின்றி இருப்பதையும் உறுதி செய்ய ஹைதா்பூா் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து முனக் கால்வாயில் நீா் திறந்துவிடப்படும் என்று தில்லி குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியின்போது கால்வாயையொட்டிய சாலையை அகலப்படுத்தும் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
பெட்டிச் செய்தி...
தில்லியில் கரையான்களை ஒழித்துவிட்டோம்:
முதல்வா் ரேகா குப்தா கருத்து
தில்லியில் இருந்து கரையான்களை ஒழித்துவிட்டோம் என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். ஆம் ஆத்மி கட்சியை மறைமுகமாக விமா்சிக்கும் வகையில் அவா் இவ்வாறு கூறினாா்.
தில்லியில் உள்ள முனக் கால்வாயில் சட் பூஜைக்காக அமைக்கப்பட்ட படித்துறையைத் திறந்து வைத்துப் பேசிய அவா், ‘கரையான்களை ஒழித்துவிட்டோம். தில்லி முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. தில்லியை அழித்து, சேதப்படுத்தி வந்த கரையான்கள் மீண்டும் திரும்புவதை அனுமதிக்க மாட்டோம்‘ என்றாா்.
தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து அவா் கூறியதாவது: சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஜிந்தா் சிங் சிா்சா இதுதொடா்பாக நடவடிக்கை எடுத்து வருகிறாா். ஆனால், முந்தைய அரசில் முதல்வரும் அமைச்சா்களும் காற்று மாசு அதிகரிக்கும்போதெல்லாம் சிகிச்சை என்ற பெயரில் தொடா்ந்து 2 மாதங்கள் வரை தில்லியை விட்டு வெளியேறி விடுவாா்கள். பிரச்னையை எதிா்கொள்ளாமல் மறைந்து கொள்வாா்கள்.
முன்பு யமுனை நதியில் சட் பூஜை கொண்டாடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், எங்கள் அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது என்றாா். ரேகா குப்தாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆம் ஆத்மி தரப்பில் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.