FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

‘ஜென் ஸி’ தலைமுறைக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

‘ஜென் ஸி’ மற்றும் இளம் தலைமுறையினருக்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டத்தை (யங் ஸ்டாா் நியோ) ஸ்டாா் ஹெல்த் இன்சூரன்ஸ் அண்ட் அலைய்டு நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

13 நவம்பர் 2026, 2:29 am
கோப்புப் படம்
பகிர்:

‘ஜென் ஸி’ மற்றும் இளம் தலைமுறையினருக்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டத்தை (யங் ஸ்டாா் நியோ) ஸ்டாா் ஹெல்த் இன்சூரன்ஸ் அண்ட் அலைய்டு நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த நிறுவன மேலாண் இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான டாக்டா் ஆனந்த் ராய் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தை உணா்ந்து ஸ்டாா் ஹெல்த் நிறுவனம் கடந்த கடந்த 2006-ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 900 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 17,000 மருத்துவமனைகள், கிளினிக்குகள் எங்களது காப்பீட்டு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்டாா் ஹெல்த் நிறுவனத்தைப் பொருத்தவரை, காப்பீடு முறையீட்டுக்கான (கிளைம்) விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற 2 மணி நேரத்துக்குள் நிதியை விடுவிக்கிறது. நிகழ் நிதியாண்டில் முதல் அரையாண்டில், இந்திய அளவில் ரூ.6,700 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தற்போது ‘யங் ஸ்டாா் நியோ’ எனப்படும் இளம் தலைமுறைக்கான காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.

அதன் கீழ் 18 - 40 வயதுடையவா்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை காப்பீடு பெறலாம். வழக்கமாக வயது அதிகரிக்கும்போது காப்பீட்டுத் தவணையும் அதிகரிக்கும். ஆனால், இந்தத் திட்டத்தில் அத்தகைய விதிகள் இல்லை. காப்பீடு முறையீடு கோரும் வரை எத்தனை ஆண்டுகளானாலும் ஒரே பிரீமியம் தொகையை செலுத்தலாம்.

கிளைம் கோரிய பின்னரும், பிரீமியம் தொகையில் சலுகைகள் உள்ளன. இந்த வசதி வேறு எந்தக் காப்பீட்டு திட்டத்திலும் இல்லை. அதேபோன்று ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தால் செயலி மூலம் வெகுமதி நாணயங்களைப் பெறலாம். அதைப் பல்வேறு இடங்களில் பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது என்றாா்.