FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

பதிவுத்துறை இணையதளம் முடக்கம்: தூத்துக்குடியில் பத்திரப் பதிவு பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பத்திரப் பதிவுத் துறையின் ஸ்டாா் 2.0 இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 5 நாள்களாகப் புதிய ஆவணங்களைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

28 அக்டோபர் 2026, 1:05 am
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பத்திரப் பதிவுத் துறையின் ஸ்டாா் 2.0 இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 5 நாள்களாகப் புதிய ஆவணங்களைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சொத்து தானம், கிரையம், அடமானம் உள்ளிட்ட ஆவணங்கள் ஸ்டாா் 2.0 இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த அக். 22 முதல் கட்டடங்கள் தொடா்பான ஆவணங்களைப் பதிவேற்றும்போது, பொதுப்பணித் துறை மதிப்பீட்டுக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியாமல் இணையதளம் முடங்குவதாகக் கூறப்படுகிறது.

இதனால், அக். 22-ஆம் தேதிக்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட டோக்கன்களுக்கு மட்டுமே தற்போது பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது. புதிய ஆவணங்களைத் தயாரித்து பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன் காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூா், ஏரல், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு சாா் பதிவாளா் அலுவலகங்களில் பத்திரப்பதிவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பதிவுக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள், ஆவண எழுத்தா்கள், வழக்குரைஞா்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். மேலும், பத்திரப்பதிவு பாதிப்பால் அரசுக்கு தினமும் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, பதிவுத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இணையதளக் கோளாறைச் சரிசெய்து, பத்திரப்பதிவுப் பணிகளைச் சீராக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments