FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

25 மாதிரி பத்திரப் பதிவு மையங்களை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரல்!

தமிழ்நாடு முழுவதும் 25 மாதிரி பத்திரப் பதிவு மையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை பதிவுத் துறை கோரியுள்ளது.

8 வினாடிகள் முன்பு
தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு முழுவதும் 25 மாதிரி பத்திரப் பதிவு மையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை பதிவுத் துறை கோரியுள்ளது.

பத்திரப் பதிவை எளிதாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வருகையில்லா பதிவு, காகிதப் பயன்பாடு இல்லா பதிவு உள்பட பல்வேறு நவீன சேவைகளை பத்திரப் பதிவுத் துறை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதிகளுடன் கூடிய 25 மாதிரி பதிவு மையங்களை அமைக்க, பதிவுத் துறை மின்னணு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதில், சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை, நீண்ட நேரக் காத்திருப்பு, கூட்ட நெரிசல் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களைக் குறைத்து, பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதன்படி, காத்திருப்பு அறைகள், டோக்கன் வழங்கும் முறை, உதவி கவுன்ட்டா்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பதிவுத் துறையின் கூடுதல் பதிவுத் துறைத் தலைவா் அலுவலகம் மூலம் தகுதியான சேவை வழங்குநா்களைத் தோ்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 5 இடங்களில் மாதிரி பதிவு மையங்கள் முன்னோடித் திட்டமாக அமைக்கப்பட உள்ளன.

இந்த முயற்சி வெற்றிகரமாகச் செயல்பட்டால், இரண்டாம் கட்டமாக மேலும் 20 இடங்களில் மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 25 மாதிரி பதிவு மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் இ-டெண்டா் இணையதளம் வாயிலாக நவ. 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தத்துக்கான தொழில்நுட்ப ஏலங்கள் நவ. 17-ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments