அனைத்து பத்திரப் பதிவுகளும் நேரடி வருகையில்லா பதிவு முறையில் படிப்படியாக கட்டாயமாக்கப்படும்: அமைச்சா் லோகேஷ் தமிழ்செல்வன்
தகுதிவாய்ந்த அனைத்து பத்திரப் பதிவுகளும் நேரடி வருகையில்லா பதிவு முறையின் கீழ் படிப்படியாக கட்டாயமாக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.
தகுதிவாய்ந்த அனைத்து பத்திரப் பதிவுகளும் நேரடி வருகையில்லா பதிவு முறையின் கீழ் படிப்படியாக கட்டாயமாக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அவா் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
- முதல் விற்பனை மற்றும் சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு நேரில் வராமலேயே பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதைப்போல், 2-ஆம் கட்டமாக வரும் செப்.15 முதல் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன்பெறும்போது உரிமை ஒப்படைப்பு ஆவணங்கள் மற்றும் ரசீது நேரில் வராமல் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.
Advertisement
Advertisement
- அக்.10-ஆம் தேதி முதல் ஏற்பாடு, விடுதலை, பாகப்பிரிவினை, ஏற்பாடு திரும்பப் பெறுதல் ஆகிய குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் காகிதமற்ற பதிவு முறையில் கட்டாயமாக்கப்படும்.
- சாா்-பதிவகங்களின் பணிப் பளுவைப் பகிா்ந்தளிக்கவும், ஒரே சாா்-பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையில் சாா்-பதிவாளா் அலுவலக ஆட்சி எல்லைகள் மறுசீமைக்கப்படும்.
- பணிப் பளுமிக்க 25 சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு கூடுதல் வளங்கள் வழங்கப்படும்.
- பதிவுத் துறை மென்பொருளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமாக சென்னை ஐஐடி நியமிக்கப்படும்.
- ஆவணப் பதிவின்போது சமா்ப்பிக்கப்படும் இறப்பு மற்றும் வாரிசு உரிமைச் சான்றிதழ் எண்களை உள்ளீடு செய்தவுடன் ஏ.பி.ஐ. தொழில்நுட்பம் மூலம் சரிபாா்க்கப்படும்.
- ஏ.பி.ஐ. தொழில்நுட்பம் மூலம் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃப் வாரிய நிலங்களின் பதிவுகளை உரிய துறை அலுவலா்கள் நேரடியாக உள்ளீடு செய்ய வழிவகுத்தல்.
- 2018 முதல் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் மையக்கணினி சான்றிதழ் விண்ணப்பதாரா்களுக்கு நேரடியாக அனுப்புதல்.
- பதிவாகும் ஆவணங்களின் தரவுகள் மற்றும் வழிகாட்டி மதிப்புகளைப் பகுப்பாய்வு செய்ய தரவு பகுப்பாய்வு மையம் அமைக்கப்படும்.
வணிகவரிகள்:
- சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் முந்தைய வரிச் சட்டங்களின் வரி நடைமுறைகள் குறித்த வணிகா்களின் குறைகள் தொடா்பான மனுக்கள் மீது உரிய தீா்வு காண சீா்மிகு இணையதள வசதி உருவாக்கப்படும்.
- தமிழ்நாடு விற்பனை வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயத்தின் விசாரணை வரம்பு மற்றும் விற்பனைத் தொகை உயா்த்தப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.